புதன், 22 செப்டம்பர், 2010

mobile secrets

Code Action




*#7780# To restore the factory settings of mobile set



*#3283# To verify the set Manufacturing date



*#746025625# To stop the sim clock



*#67705646# Use to delete the operator logo



*#73# Use to reset game scores and phone timers



*#0000# Use to display the mobile software version



*#06# To display the IMEI Number of the mobile



*#92702689# To display the mobile warranty related settings



*#7760# To display the Production serial number



*#bta0# Use to display Bluetooth MAC address



*#9999# Use to display the mobile software version



*#147# If you are using Vodafone then this code will help



you show the last call detail



*#2640# To display the mobile security code



*#7328748263373738# Apply to resets the set default security code



*#43# To verify the call waiting status



*#2820# To verify the Bluetooth information



*#7370# To format the mobile phone memory



*#delset# To delete the GPRS AND EMAIL settings



#pw+1234567890+1# To display the lock status of mobile set



#pw+1234567890+4# To display the lock status of your SIM

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ரமளான் ஸ்பெஷல் குரான் ஒதுவதற்கும்,வசனங்களை கேட்பதற்கும்‏

இது ஒரு தலை சிறந்த வலை தளம் நீங்கள் விரும்பிய இமாம்களின் குரலில் கேட்கலாம் மேலும் தமிழ் தர்ஜுமாவும் உண்டு 
இங்கே சொடுக்கவும்

ரமளான் நோன்பு பற்றிய செய்தி

முன்னுரை:
நோன்பை சில செயல்கள் முறிக்கும் சில செயல்கள் முறிக்காது. அதோடு சிலசெயல்களை தவிர்ந்தும் இருக்க வேண்டும். அவற்றையும் தெரிந்து கொண்டால்தான் நோன்பின் முழுமையான பலனை அடைந்து கொள்ள முடியும்.
1. உண்பதும் பருகுவதும்:
 'இன்னும் ஃபஜ்ர் எனும் வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்துதெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். பின்னர் இரவு வரும் வரைநோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187) ஃபஜ்ரு வரை உண்ணலாம் பருகலாம் என்பதிலிருந்து அதற்கு மேல் உண்டாலோபருகினாலோ நோன்பு முறிந்து விடும் என்பதை விளங்கலாம்.
2. தாம்பத்திய உறவு கொள்வது:
'நோன்புகால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்குஅனுமதிக்கப்பட்டுள்ளது' (அல்குர்ஆன் 2:187) இந்த வசனம் நோன்புகால இரவில் உடலுறவில் ஈடுபட அனுமதிக்கிறது, பகலில்அனுமதி இல்லை என்பதை தெரிவிக்கிறது. அதாவது பகலில் உடலுறவில் ஈடுபட்டால்நோன்பு முறியும்.
1. பொய்யும் செயலும்:
 'யார் பொய்யான பேச்சையோ பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோஅவர் தமது உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத்தேவையுமில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1903, அபூதாவூது 2355) நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் இறையச்சம் உடையவர்களாக ஆகவேண்டும் என்பதற்காக என்றிருக்கும் போது பொய்யும் நடிப்பும் இதற்குஇசைவான செயல்கள் அல்ல. அதனால் நோன்பு நோற்பவர் இவற்றை விட வேண்டும்.இவற்றை விடாதவர் நோன்பின் பயனை அடைந்தவராக கருதப்பட மாட்டார்.
 2. கெட்ட வார்த்தையும் சண்டையிடுவதும்:
 'உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேசவேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1904,முஸ்லிம் 2118, அபூதாவூது 2356) நோன்பு நோற்பவர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதையும் சண்டை சச்சரவுசெய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். நோன்பின் போது எடுக்கும்பயிற்சி அதன் பின்வரும் நாட்களிலும் தொடர வேண்டும்.
1. மறதியாக உண்பதும் குடிப்பதும்:
 'ஒருவர் நோன்பாளியாக இருக்கும் போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோஅவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வேஉண்ணவும், பருகவும் அளித்துள்ளான்' நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, திர்மிதி,இப்னுமாஜா) 'களாச் செய்ய வேண்டியதில்லை' என்று தாரகுத்னி, பைஹக்கீ, ஹாக்கிம்ஆகிய நுல்களில் பதிவாகியுள்ளது. உண்டாலும் குடித்தாலும் நோன்பு முறிந்து விடும், ஆனாலும் மறதியாகஉண்டாலும் குடித்தாலும் நோன்பு முறியாது. நினைவுக்கு வந்ததும் உண்பதையும்குடிப்பதையும் நிறுத்தி விட்டு தொடர்ந்து நோன்பாக இருந்து கொள்ளவேண்டும்.
2. மனைவியை முத்தமிடுவது:
 'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு தம் மனைவியரில் ஒருவரைமுத்தமிடுவார்கள்!' என்று சொல்லி விட்டு ஆயிஷா (ரலி) அவர்கள்சிரித்தார்கள். (நூல்: புகாரி 1928) நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது முத்தமிடுவார்கள்,கட்டிப்பிடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம்கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, நஸயீ,இப்னுமாஜா) உணர்களை கட்டுப்படுத்திக் கொள்பவர்கள் நோன்பிருக்கும் போது மனைவியைமுத்தமிடலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
3. தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்படுதல்:
நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹுநேரத்தை அடைவார்கள். ரமளானில் நோன்பு நோற்பார்கள். (அறிவிப்பவர்:உம்முஸலமா (ரலி), ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மது) இந்த ஹதீஸ் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டு குளிக்காமல் கூட நோன்புவைத்துக் கொண்டதை தெரிவிக்கிறது. அதே போல தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டுகுளிப்புக் கடமையானவருக்கும் இதே ஹதீஸ் பொருந்தும். நோன்பு முறியாது. 'வாந்தியோ, ஸ்கலிதமோ, இத்தம் குத்தி எடுப்பதோ ஒருவரது நோன்பைமுறிக்காது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழர்அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூது 2370)
 4. குளிப்பது:
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாகதமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்றுநபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மது, அபூதாவூது 2359,நஸயீ)
5. பல் துலக்குவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னால் எண்ணிச் சொல்லமுடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். (அறிவிப்பவர்: ஆமிர்பின் ரபிஆ (ரலி), நூற்கள்: அபூதாவூது, திர்மிதி)
6. வாய் கொப்பளிப்பது:
'...பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்துமூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்....' இதுதான் நபி (ஸல்) அவர்களின்உளூ என்று அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்:புகாரி 1911, இப்னுமாஜா 405) ஒலுவின் போது வாய் கொப்பளிக்க வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்களின்கட்டளை. அது நோன்பு நோற்றிருந்தாலும் சரி, நோன்பு வைக்காமல் இருந்தாலும்சரி, ஒலுவின் போது வாய் கொப்பளிக்க வேண்டும்.
7. மூக்குக்கு தண்ணீர் செலுத்துதல்:
'நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் சமயத்தில் தவிர மற்ற சமயங்களில்மூக்கை நன்றாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்யுங்கள்' என்ற நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி), நூற்கள்:நஸயீ, அபூதாவூது 2360, திர்மிதி 718, இப்னுமாஜா 407) நோன்பு நோற்றிருக்கும் போது மூக்குக்கு தண்ணீர் செலுத்தி சுத்தம்செய்தால் தண்ணீர் தொண்டையை அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
8. எச்சிலை விழுங்குவது:
உண்பதும் குடிப்பதும் இல்லறத்தில் ஈடுபடுவதும் தான் நோன்பைமுறிக்கும், எச்சிலை விழுங்குவது நோன்பை முறிக்காது. ஏனெனில் அது உணவோகுடிப்போ இல்லை.
9. உணவை ருசி பார்ப்பது:
நோன்பாளி உண்பதற்குத் தான் தடுக்கப்பட்டுள்ளார். உணவு சமைப்பவர்கள்அந்த உணவை ருசி பார்க்க தடை இல்லை. எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல்துலக்கிய நபி (ஸல்) அவர்களின் ஹதீஸே இதற்கும் ஆதாரமாகும். பற்குச்சியில்ஒரு வகை ருசி இருக்கத்தான் செய்கிறது. அந்த ருசியை நாக்கு உணர்வது நோன்பைமுறிக்காது என்றால் உணவின் ருசியும் நோன்பை முறிக்காது. ஆனால் ருசிபார்த்த உணவை துப்பிவிட வேண்டும்.
 10. இரத்த தானம் செய்வது:
 'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது இரத்தம் குத்திஎடுத்துக் கொண்டார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்.(நூல்: புகாரி 1939) ';;;...நோன்பாளி இரத்தம் கொடுப்பதற்கு நபி (ஸல்) அவர்கள்அனுமதியளித்தார்கள்' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: தாரகுத்னீ) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள்வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன்.அதற்கவர்கள் 'பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்' என்றுவிடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னானி (ரலி), நூல்:புகாரி) மருத்துவ சோதனைக்காகவும் உயிர்காக்கும் நோக்கத்தில் இரத்த தானம்செய்வதற்கும் இந்த ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது.
11. வாந்தி எடுப்பது:
 'தானாக ஒருவருக்கு வாந்தி வந்தால் அவர் (நோன்பைக்) களாச் செய்யவேண்டியதில்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர் களாச் செய்யவேண்டும்' என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.(நூற்கள்: அஹ்மது, அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்,தாரகுத்னி, ஹாக்கிம்)
12. ஊசி போட்டுக் கொள்வது:
 நோயாளி நோன்பை விட்டு விட்டு வேறோரு நாளில் அதை களாச் செய்ய வேண்டும்என்பதற்கு அனுமதி இருந்தாலும், ஊசி போட்டுக் கொண்டால் அல்லது மருந்துதடவிக் கொள்வது போன்ற சிறு மருத்துவ உதவி அளித்தால் நோய் நீங்கி விடும்என்ற நிலையில் இருப்பவர்கள் நோன்பிருந்து கொண்டே செய்து கொள்ளலாம். ஆனால்மாத்திரை டானிக் போன்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால்நோன்பு திறந்த பிறகு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் அல்லது நோன்பை விட்டுவிட்டு களாச் செய்ய வேண்டும்.
13. சொட்டு மருந்து இட்டுக் கொள்வது:
நோன்பிருந்து கொண்டே கண், காது, மூக்கு போன்ற உறுப்புகளுக்கு சொட்டுமருந்து இட்டுக் கொள்ள முடியும் அதனால் நோன்பு முறியாது. மூக்குக்குஇடும் சொட்டு மருந்து தொண்டையை கடந்து விடும் என்றிருந்தால் அதைதவிர்ப்பது நல்லது. நோன்பு திறந்த பிறகு அதை இட்டுக் கொள்ள வேண்டும்.
முடிவுரை:
நோன்பு வைப்பவர்களுக்கு இதுபோன்ற செயல்களினால் நோன்பு முறிந்துவிட்டதோ என்ற சந்தேகம் அடிக்கடி நிகழ்வதை நாம் கண்டுவருகிறோம். அவற்றைநாம் இங்கே பட்டியல் இட்டுள்ளோம். இவற்றை அறிந்து நோன்பை பூரணமாகநிறைவேற்றவோமாக!


நன்றி : Abdul Hakkeem .R
http://www.hakkrem.blogspot.com/

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

windows xp tamil (xpதமிழில்)

உங்களில் பலருக்கும் தெரிந்த விசயம் தான் இருந்தாலும் முதல் பதிவு தமிழோடு இருக்கட்டுமே. அதனால் தான் இந்த பதிவு.windows xp இது தான் எல்லாரும் அதிகமாக பயன்படுத்துகின்றது எளிமையானதும் கூட. இதை இப்போது முழுமையாக தமிழில் மாற்றுவது எப்படி என்பது உஙகளுக்கு தெரியும் தான்.தெரியாதவர்கள் முதலில் இங்கு சென்று பதிவிறக்கவும்.

பதிவிறக்கியபின் அதை இயக்கி உஙகள் கணிணியில் நிறுவவும்.இப்போது சொல்லவும் வேண்டுமா.......அப்புறம் என்ன Restart தான்

இது பதிவுலகில் பழம் தின்று கொட்டை போட்ட உங்களுக்கு தெரிந்ததுதான் இருந்தாலும் முதல் பதிவென்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உங்கள் குமரிமைந்தன்.ராஜாமுஹம்மது.மேக்கா மண்டபம்...
அப்படியே உங்க கருத்தை சொல்லி ஒரு குத்து குத்துங்க (ஒட்டுதான்)

புதன், 4 ஆகஸ்ட், 2010

வணக்கம்(புது முயற்சி)

இந்த தளத்தில் தினம் ஒரு இடுகை,அதாவது இலவச கணிணி மென்பொருள்கள் உங்களுக்காக இலவசமாக வெளியிடுவதற்காக ஒரு சிறிய முயற்சி...........


பயன்படுத்தி்ப் பார்த்து அப்படியே உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்தால் மேலும் மேலும் பல நல்ல மென்பொருள்கள் பற்றி பதிவிடஉதவும்என்றநம்பிக்கையுடன்..................

அய்யய்யோ இப்படிதாங்க கடைசில கோட்டயவிட்ருவேன்... சொல்லவந்ததை அப்படியே ஒரு ஓட்டயும் குத்திருங்க சந்தோசமாபூடும்.....................









உங்கள்குமரிமைந்தன்...ராஜாமுஹம்மது,மேக்காமண்டபம்.......